NEET முன்வைத்தது யார் ??

தேசிய மருத்துவ கழகம்

எப்பொழுது ??
2010 ஆண்டு

அப்போது ஆளும் கட்சி எது ?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மற்றும் தி.மு.க.

நிலைபாடு என்ன ??
நாடாளமன்ற செயற்குளு NEET எதிர்க்கும் மாநிலங்களுக்கு விளக்கு அளித்தது.

NEET அமலாக்கத்திற்கு முன்னர் கலைஞரின் நிலைப்பாடு என்ன ??
NEET முழுமையாக எதிர்த்து கலைஞர், திரு. மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை நடைபெற்றது.

NEET முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. மேலும் NEET திட்ட வரைவு இந்திய நாட்டிற்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் மொழிந்தது குறிப்பிடதக்கது.

மீண்டும் NEET உயிர் பெற்றது எப்போது ?

இந்தியாவின் பாதுகாவலர், தற்போதைய பிரதமர் திரு.மோடி 2015 ஆம் ஆண்டு பதவியேற்ற பின் NEET தடை எதிர்த்து இந்திய அரசாங்கம் மேல் முறையீடு செய்து 2016 ஆம் ஆண்டு NEET இந்தியாவில் அமல்படுத்தப்பெற்றது.

2016 – முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் நல்லாட்சியினால் தமிழகம், குஜராத் மற்றும் மேலும் இரண்டு மாநிலங்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டது.

செல்வி ஜெயலிலதா அவர்களின் மறைவிற்கு பின்னர் தற்போதைய அடிமை அரசு ஆட்சி பொறுப்பேற்றனர். இது தமிழகத்தின் இருண்ட காலம் எனலாம்.

2017 ஆம் ஆண்டு திருமதி. நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு NEET விளக்கு அளிக்கப்படும் என உறுதிமொழி அளித்தார் டெல்லி செல்லும் போது. அப்போது அவர் மத்திய வணிகதுறை அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி சென்ற இரண்டு நாட்களுக்கு பின்னர் திரு. குருமூர்த்தியின் தலையீட்டால் NEET விளக்கு அளிக்க இயலாது என மொழிந்தார். அப்போது அவர் பாதுகாப்புதுறை அமைச்சராக பதவி ஏற்று இருந்தது குறிப்பிடதக்கது.

இவர்கள் இருவரின் துரோகத்தினால் தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் பக்தாளோ தி.மு.க, காங்கிரஸ, நளினி சிதம்பரம் என ஏக மொழி அடுக்குகின்றனர், பல அரசியல் காரணங்களுக்காக !!

-கார்த்திகேய சிவசேனாபதி
16-04-2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *