1) கடந்த இரண்டு நாட்களாகக் காஷ்மீர் மாநிலத்தில் ARTICLE 370 சிறப்பு அந்தஸ்து நீக்கத்தைப் பற்றி பெரும் விவாதங்கள் நடக்கும் பொழுது, சிலர் அம்பேத்கர் 370 -இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தைப் பற்றி கூறியதாக ஒரு பொய்யான கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

அது மட்டும் இன்றி காஷ்மீர் வாழும் மக்களுக்கு இரட்டை குடியுரிமை இருப்பதாகவும், நமது வரிப்பணம் எல்லாம் காஷ்மீர் மாநிலத்திற்குச் செல்வதாகவும் குறிப்பிடுகின்றனர்.

அதே போல் இந்திய ராணுவ வீரர்கள் உயிருக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் ARTICLE 370 இருப்பதாகவும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

1 . காஷ்மீர் சட்ட திருத்தும் கொண்டு வந்த மாத்திரத்தில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இருக்கும் பிரச்சனை தீர்ந்து விடப் போகின்றதா ?

2 . பாகிஸ்தானிய இந்திய சர்வதேச எல்லை மாற்றி அமைக்கப் பட உள்ளதா ?

3. SIACHEN GLACIER , உலகத்திலே மிக முக்கிய இரண்டு நாடுகளின் போர்ப் படைகள் நேருக்கு நேர் சந்திக்கக் கூடிய மிகவும் குளிரான கொடுமையான சூழ்நிலை மாறிவிடப் போகின்றதா ?

என்று எந்த புரிதலும் இல்லாமல் ஒரு பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அது மட்டும் இன்றி திரு.அம்பேத்கரைத் தவறாக சித்தரித்து, அவர் கூறிய கருத்தாகவும் ஒரு பொய் பிரச்சாரத்தைச் செய்து “இதற்கு என்ன கூறுகிறீர்கள் ? ” என்று கேட்கிறார்கள்.

அதற்கான பதில் பின்வருமாறு .

அம்பேத்கர் சமூக நீதிக்காக சமூக நீதியை மேம்படுத்தி வர்ணாஷ்ர ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி, வேலை வாய்ப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனை நீங்கள் ஏற்றுக் கொண்டு உள்ளீர்களா ? கிடையாது

மொழி கொள்கையில் , ஹிந்தி திணிப்பைத் தவிர்த்து அணைத்து மொழிகளுக்குமான மரியாதையும் முக்கியத்துவமும் வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டு உள்ளீர்களா ? கிடையாது .

அம்பேத்கர் சாதி அற்ற, வர்ணாஷ்ரமம் அற்ற, ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றார் . அதை ஏற்றுக் கொண்டு உள்ளீர்களா ? கிடையாது

அம்பேத்கர் இந்து மாதத்தில் இருக்கும் குறைகளை எடுத்துக் கூறி அதனை மாற்ற வேண்டும், இல்லாவிட்டால் நம்மை இது முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லாது என்றார் . அதை ஏற்றுக் கொண்டு உள்ளீர்களா ? கிடையாது.

சில மாநிலங்களில் ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறச் சொல்லி வேறு மதத்தினரை அடித்து உதைத்துக் கொன்று குவிக்கும் கூட்டத்தைக் கண்டித்து உள்ளோர்களா இதுவரைக்கும் ? கிடையாது

மாடுகள் கொண்டு செல்லும் விவசாயிகளைத் துன்புறுத்தும் கோ ரக்ஷர்களிடம் இருந்து காப்பாற்றி உள்ளீர்களா ? கிடையாது

ரயில்வே, வருமானவரித்துறை போன்ற நடுவண் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் துறைகளில் வட இந்தியர்களைக் குவித்து, தமிழர்களின் வேலைவாய்ப்பைக் கெடுத்துக் கொண்டு இருக்கும் நடுவண் அரசைக் கண்டித்து உள்ளீர்களா ? கிடையாது.

இப்படி எதுவும் செய்யாமல் திடீர் என அம்பேத்கர் புகழ் படுபவர்களுக்கு, சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தேவையும் இல்லை, சொல்லவும் முடியாது !!

– கார்த்திகேய சிவசேனாபதி .
07-08-2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *