காலச்சக்கரம் சுழலும் ஒவ்வொரு நாழிகைக்கு தன்னுள் ஓர் பொருள் கொள்ளும். அது போல் தான் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்களும்.
“எங்கள் காளையர் காளைகளைக் கட்டி தழுவுவர்” என்று கூறி இளைஞர்களின் மனதில் நீங்க மற இடம் பெற்றவர். “ Ammend PCA “ என்பதைத் தாரக மந்திரமாக்கித் தை புரட்சிக்கு வித்திட்டவர்.
காளையின் நாயகனாய் இருந்தவரை நாளைய மன்னர்களின் நாயகனாய் உயர்த்தியது இவரது தை புரட்சி .
காலம் ஒவ்வொரு புரட்சியிலும் ஒவ்வொரு தலைவனை இச்சமூகத்திற்குப் பரிசளித்து இருக்கின்றது. 1930 ல் ஹிந்தி திணிப்பில் தொடங்கி , இந்தியாவின் அவசர பிரகடன நிலையிலும் அது தொடர்ந்தது சரித்திரம்.
இன்று தை புரட்சியும் மக்களுக்கான தலைவனாய் இவரை இளைய சமுதாயத்திற்கு அடையாளம் காட்டியது என்றால் அது மிகை ஆகாது.
இந்திய குடியாட்சியின் மீதும், சமதர்மத்தின் மீதும், சமத்துவத்தின் மீதும், தன்னிகரில்லா நம்பிக்கை உண்டு இவருக்கு. “இந்திய நீதித்துறையே உலகின் தலை சிறந்த ஆற்றல் மிக்க துறை, 130 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது” என்பதைத் தாரக மந்திரமாய் தன்னை சார்ந்தோருக்கும் பின்பற்றுவோருக்கும் எடுத்துரைப்பவர்.
தன்னைத் தேடி வரும் அத்தனை இளைஞர் இளைஞிகளையும் இந்திய குடியியல் பணிக்கு தங்களை தயார் செய்யும் படி தொடர்ந்து வலியுறுத்துபவர். அரசின் மீதும் அரசு அதிகாரிகளின் மீதும் இவர் கொண்டுள்ள அயராத நம்பிக்கையின் வெளிப்பாடே அது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தினை சாசனமாய் ஏற்றவர்.
சமூக நீதி ஒன்றே தமிழகத்தின் விடியலுக்கும் பிற மாநிலங்களுக்குத் தமிழகம் முன்மாதிரியாய் திகழ்வதை என்றும் எடுத்துரைக்க மறந்தவர் அன்று.
துணிவும் நேர்மையும் ததும்பும் இவரின் எழுத்திலும் பேச்சிலும்.
இவரின் எழுத்துக்களையும் செயல்களையும் நாளைய தலைமுறையினை சென்றடைய அதைப் பேணி பாதுகாக்க வேண்டி இளைஞர் குழுவால் உருவாக்கப்பட்டதே இந்த இணையத்தளம்.
காலம் கடந்து காலத்தினை தாங்கி நிற்கட்டம் இவ் இணையம்.