கடந்த இரண்டு நாட்களாக ஆழ்துளாய் கிணற்றில் விழுந்த குழந்தை மற்றும் அச்சூழல் குறித்த புரிதல் இல்லாமல், சிலர் மனித நேயம் அற்ற சில கருத்துகள் தொடர்ந்து பகிரப் பட்டு வருகின்றது.
இரண்டு விதமான கருத்துகள்,
1. அந்த குழந்தையின் குடும்பத்திற்கு அரசு உதவுவதை எதிர்த்தும்,
2. அந்த குழந்தையின் தாய் தந்தை தான் இதற்கெல்லாம் பொறுப்பு !!
அரசாங்கம் என்ன செய்துவிட முடியும், ஒவ்வொரு வீட்டிலும், தனி நபர் தோட்டத்திலும் ஒவ்வொரு ஊரிலும் பார்க்க முடியுமா ??
என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அரசாங்கம் இதற்கெல்லாம் பொறுப்பில்லை –
அரசாங்கம் பொறுப்பு இல்லை, குழந்தையை ஆழ்துளாய் கிணற்றில் தவறவிட்டது பெற்றோரின் தவறு தான்,
தலைக்கவசம் இன்றி வண்டி ஒட்டுவது மக்களின் தவறு,
ஆற்றை மாசுபடுத்துவது, சுற்றுச்சூழல் புரிந்துணர்வு இன்றி செயல்படுவது மக்களின் தவறு தான்
என மக்கள் தான் திருந்த வேண்டும்,
மக்களே மக்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும், என்றால்
எதற்கு ஜனநாயகம் ?
எதற்கு இந்த அரசாங்கம் ??
அரசாங்கம் தேவை இல்லாமல் தனி மனித ஒழுக்கமும், தனி மனித சமுதாயமே, ஒரு நாட்டை, மாநிலத்தை, நாட்டை வழி நடத்த முடியும் என்றால்,
எதற்குச் சட்டம் ஒழுங்கு ??
எதற்கு நீதித்துறை ??
எதற்கு அரசு அதிகாரிகள் ?
எதற்கு மாவட்ட ஆட்சியர் ?
எதற்குச் சட்ட மன்ற உறுப்பினர் ??
இவர்களுக்கு எல்லாம் என்ன வேலை ??
அரசாங்கத்தின் வேலை மக்களின் வரிப்பணத்தில் எட்டு வழிச் சாலை, 10 ஆயிரம் கொடி ரூபாய் சாலைப் பணிகளை மேற்கொள்வது,
விவசாய நிலங்களில் Hydro Carbon எடுப்பது,
அனைத்து அரசு நிறுவனங்களையும் தனியார் மயமாக்குதல்
விமானம் மற்றும் இரயில் சேவையைத் தனியாருக்கு விற்பது
போன்றவை தான் அரசாங்கத்தின் வேலையா ???
தனி மனிதனைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் வேலை இல்லையா ???
அக்குழந்தையை இழந்த பெற்றோர் நிவாரண பணத்தில் மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்து விடுவார்களா ??
எத்தனை பேர் பசி பட்டினியில் துன்புறுவோர் நிவாரண பணம் தந்தால் தன் குழந்தையைக் கொடுத்து விடுவர் ??
என்ன ஒரு முட்டாள் தனமான சிந்தனை .
அந்த குழந்தையை இரந்ததற்கு நஷ்ட ஈடாக இருக்கும் ஒரு குழந்தை வாழ்வில் முன்னேறிய நிலை அடைய அந்த கூலித் தொழிலாளி ஒரு நிரந்தர தொழில் செய்து பிழைக்கப் போகிறார்.
20 லட்சம் நிவாரணம் கொடுத்ததற்கு இது வரி செலுத்துவோரின் பணம், Tax Payers Money, என்று கூவும் அறை வேக்காடுகள் 4 லட்சம் கோடி வருடம் 10-20 பெரு நிறுவனங்கள் வருமானவரி விலக்காக அரசாங்கம் வாரி வழங்கும் போது ஏன் கூவுவது இல்லை ??
அதே போல் இந்திய நாட்டின் மொத்த சொத்தை ஒன்பது பேர் 50% ஆள்கிறார்கள்.
இது சரியான அரசாங்க பணி தானா என விளக்குவீராக…???
வங்கியில் லட்சக்கணக்கான கோடியைக் கடனாகக் கொடுத்து அந்த கடனை திரும்பச் செலுத்த இயலாமல் ஓடியவர்களைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது.
1 லட்சம் கோடிகளுக்கு மேல் வங்கிக் கடன் திரும்பப் பெற இயலாமல் தள்ளுபடி செய்கின்றது அரசு,
அதை விடுத்து ஒரு ஏழைக்கு இலவச கல்வியும், தொலைக்காட்சியும், உணவும், மிதிவண்டியும், மருத்துவ காப்பீடு தந்தால் மட்டும் எப்படி உங்களால் கேள்வி எழுப்ப முடிகின்றது ???
தொடர்ந்து சமூக வலைத்தளங்களில், நிவாரணம். வழங்கியது தவறான முன் உதாரணம் என்போர் 4 லட்சம் கோடி குஜராத் பனியா முதலாளிகள் தள்ளுபடி செய்ததைக் குறித்த கருத்தையும் பதிவிட வேண்டுகிறேன்.
– கார்த்திகேய சிவசேனாபதி
31 -10-2019