நமது வரலாற்று ஆய்வாளர் திருமதி. நந்திதா கிருஷ்ணன் நேபாளத்தில் கிமு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு TERACOTTA மாதிரியை, சுமார் 3000 ஆண்டுகள் என்று கண்டுபிடித்ததாகக் கூறுகின்றார்.
உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி (புலனம் (WHATSAPP ) பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களைத் தவிர) மகாபாரதத்தின் கதை கிமு 1 ஆம் ஆண்டு அதாவது 2100 முன்னர் (வாய்வழி வரலாறு) மற்றும் எழுதப்பட்ட வரலாறு (கி.பி 1 நூற்றாண்டு) அதாவது 1900 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன ஆய்வாளர்களால் தேதியிடப்பட்டுள்ளது.
இப்போது திருமதி நந்திதா கிருஷ்ணன் அவர்களுக்கு சில கேள்விகள்
1. TERACOTTA TABLET என அவர் குறிப்பிட்டுள்ள மாதிரியை எங்கே சோதித்தார்?
2 . என்ன என்ன சோதனைகள் செய்யப்பட்டன?
3. எந்த நாட்டில் சோதிக்கப்பட்டது?
4 . சோதனை செய்த நிறுவனம் ISO தரச் சான்றிதழ் பெற்றுள்ளதா ?
5 . எந்த கலாச்சாரத்தினை சார்ந்தது இந்த மாதிரி?
6 . ஆய்வு அறிக்கை எங்கே ?
7. கீழடி ஆய்வு அறிக்கை முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் தூக்கமின்மை கோளாற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் இரண்டு மாபெரு அய்ய்வலர்கள் திரு. பக்ஷிராஜன் மற்றும் திரு.நாகசாமி ஆகியோரின் பின்புலம் இதில் அடங்கியுள்ளதா ?.
8 . கீழடிக்குப் பிறகு வலதுசாரிகள் கலக்கமடைவது சுமார் 3000 ஆண்டாக நீங்கள் ஆழமாக வேரூன்றிய பொய்களும் புராணங்களும் சிதைந்துவிட்டதாலா ? .
திருமதி நந்திதா கிருஷ்ணன் அவர்களின் சிறப்புகள்
– தமிழகத்தின் தனித்துவமான ஆளுமை அவர்
– தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் மீள் எழுச்சி எங்கிருந்தாலும் அதை அழிக்க அவரின் பங்கு ஓங்கி இருக்கும்.
– ஜல்லிக்கட்டு / ரேக்ளா தனது BLUE CROSS , AWBI, FIAPO, PFA போன்ற அமைப்புகளைக் கொண்டு அழிக்கப் பயன்படுத்தியவர்.
– சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மக்களிடையே வளரும் போது அவரின் அரசியல் பலம் கொண்டு சுற்றுச்சூழல் ஆர்வலராக மாறுவர்.
– பல்லிபாளையத்தில் காவேரி நதிக்கு மிகப்பெரிய மாசு ஏற்படுத்துபவர் , நாமக்கல் மாவட்டம் தனது நிறுவனங்களான Seshayee paper and boards LTD,, மற்றும் Ponni Sugars LTD.
– தமிழ் இலக்கியம், சங்க காலம், கீழடி போன்றவற்றை ஆய்வுசெய்யச் சிறந்த தொல்லியல் துறை இருக்கும்போது, அவர் ஒரு வரலாற்றாசிரியரின் பாத்திரத்தை, ஆய்வாளராக உருமாறக் கூடியவர் .
கார்த்திகேய சிவசேனாபதி
14-10-2019