மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியத் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களே,

கடந்த பத்து தினங்களாகப் பத்திரிகைகளிலும் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளங்கள் முழுவதும் தமிழக மக்கள் கொந்தளிக்கச் செய்து கொண்டு இருக்கும் செய்தி பொள்ளாச்சியில் 270 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல், கொள்ளை, பண பறிப்பு , கடத்தல், மிரட்டல் , என சில தீய சக்திகள் பல வருட காலமாகச் செய்து கொண்டு இருப்பது இன்று வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

பல பாதிக்கப் பட்ட பெண்களுள் ஒருவர் தைரியமாக இந்த அநீதியை எதிர்க்க வேண்டும் என்று காவல் துறையினரிடம் புகார் கொடுத்து உள்ளார். காவல் துறையினர் அதனை மிகுந்த முக்கியத்துவம் அளித்து அணுகி இருத்தல் வேண்டும். அந்த பெண் குறித்த தகவல்கள் யாரும் அறியா வண்ணம் பாதுகாக்கப் பட்டு இருக்கவேண்டும்.

1 . ஒன்றும் முக்கியம் இல்லாத வழக்குகளை எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக முதல் தகவல் அறிக்கையை மறைத்து வைத்துச் செயல்படக் கூடிய பொள்ளாச்சி காவல் துறை இப்படி பெண்கள் சம்மந்தப்பட்டுள்ள வழக்கினை அலட்சியமாக அணுகியுள்ளது.

2 . புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை சில அயோக்கியர்கள் தாக்கி உள்ளனர். அவர்கள் மீது மீண்டும் பொள்ளாச்சி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் கைது செய்யப் படுகின்றனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவரைப் பொள்ளாச்சி நீதிமன்றம் பிணையில் வெளியிடுகின்றது.

3 . நீதிமன்றத்தில் பொள்ளாச்சி காவல் துறையினர், அரசு சார் தெளிவான பதிவுகள் தரவுகள் உத்தரவுகள் தந்து இருத்தல் வேண்டும். தேவைப் பட்டு இருந்தால் மூத்த வழக்குரைஞரை அரசே நியமித்து இருக்க வேண்டும்.

4 . அதன் பின் ஜூனியர் விகடன் , ஆனதா விகடன் குறிப்பாக நக்கீரனின் அந்த காணொளி நெஞ்சைப் பதற வைக்கின்றது. அந்த பெண்களின் அவலக் குரல் பல லட்சம் மக்களின் இதயங்களை உடைத்து இருக்கின்றது.

5 . ஒரு ஜனநாயகத்தில் ஒரு பாதுகாப்பான சமுதாயத்தில் தான் வாழ்கின்றோமா என்ற கேள்வியினை இது எழுப்புகின்றது.

6 . இதுவரை தமிழகத்தில் குறிப்பாகக் காவல் துறையையும் சேர்ந்து நிர்வகிக்கக் கூடிய பதவியை நீங்கள் இதுவரை எந்த கருத்தையும் பதிவு செய்யாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தையும் ஆச்சரியத்தை அளிக்கின்றது.

7. தாங்கள் உடனடியாக பத்திரிக்கையினை சந்தித்து தாங்கள் அரசு என்ன செய்கின்றது ACTION TAKEN REPORT வெளி கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டு கொள்கின்றேன்.

8.  உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி என்ன நடந்து உள்ள என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்களின் பிரதிநிதித்துவம் மூலம் அறிந்து செயல் படுங்கள்

அல்லது சிறப்புச் சட்டசபை கூட்டி இதைப் பற்றி மட்டும் விவாதங்கள் செய்யுங்கள், சட்டச் சிக்கல்கள் இருப்பின் (தேர்தல் தேதி அறிவித்த பின் சட்டமன்ற கூட இயலாது என்ற சட்டச் சிக்கல் இருந்தால் அனைத்து கட்சி கூட்டத்தினை நடத்துவது நல்லது.

இறுதியாகப் பொதுமக்கள் சார்பாக ஒரு வேண்டுகோள், உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய பெண் நீதி அரசரை நியமித்து ஒரு நீதி விசாரணைக்கு உத்தரவு இடுங்கள். அந்த விசாரணை ஆணையத்திலே நீதி அரசர் முதல் கடை நிலை ஊழியர் வரை  அனைவரும் பெண்களாகத் தான் இருத்தல் வேண்டும். இரண்டாவது நீதி அரசரைத் தவிர அனைவரும் சத்திய பிரமாணம் மேற்கொள்ளுதல் வேண்டும்.

குறிப்பாக இரண்டு முதல் மூன்று தொலைப்பேசி எண்களை சமூக வலைத்தளங்களில் செய்தித் தாள்களில் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த எண்களை அழைக்கலாம், நீதி அரசர் அல்லது ஒரு உயர் பதவியில் இருக்கும் IAS அதிகாரி, உதாரணத்திற்குத் திருமதி அமுதா IAS போன்ற நேர்மையான பெண் அதிகாரியை நியமித்து அவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசவும் அவர்களின் சாட்சிகள் மிகவும் முக்கியத்துவத்துடனும் பாதுகாப்பாகவும் அணுகப்படவேண்டும் என்று பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உத்தரவாதம் அளித்து அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ள வழி வகை செய்யுங்கள்

பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரே ஒரு முறை இந்த ஆணை எதிர்த்து ஒரு முறை இந்த குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிரான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு அதற்குப் பின் எங்கேயும் வர வேண்டாம் என்ற ஒரு சூழலை அவசரச் சட்ட திருத்தும் மூலமோ அல்லது ஒரு அரசு ஆணையின் மூலமோ உருவாக்குங்கள்.

இவை அனைத்தையும் உருவாக்கி அந்த ஆணையம் மூன்று மாதத்தில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி உத்தரவு பிறப்பியுங்கள்.

இதுவே நடந்த அநீதிக்குச் செய்யக்கூடிய ஒரு நீதி செயலாக இருக்க முடியும்

நன்றி வணக்கம்.

Dear Mr.Edapaddi Palaniswamy, hon chief minister of TamilNadu. What’s your statement on the pollachi gruesome activities? As the chief minister and holding home portfolio your statement is important.

These are following demands from the common people of the state.

  • Call for a special assembly session to discuss only this issue if it’s legally tenable.
  • If not possible to call for a assembly session call for a all party meeting immediately.
  • Come out with a white paper and action taken report.
  • Institute a judicial commission under a sitting judge of the hon high court of Madras ( woman judge only). The entire commission from the judge, amicus curie, to Steno should be only woman sworn in to secrecy. Appoint Mrs.Amutha I.A.S as govt interlocutor with the affected girls.
  • Advertise the appointment of the commission in television, news print, social media with few mobile nos for the victims to complaint safely without fear of expose like yesterday. The SP of Coimbatore district in a press conference expressed regret after mentioning the complaints name more than four times. Is that done deliberately to threaten others from not complaining is the thought running in many peoples mind.
  • Assure the victims their complaints will be heard only by the hon high court judge, and Mrs.Amutha I.A.S. also assure that not more than once the victims need to come to testify.
  • Add psychiatrist or clinical psychologist also woman in to the commission to counsel the victims and their parents.

CB CID investigation will not help.

#appointallwomanjudicialcommission

#pollachirape

Karthikeya Sivasenapathy

We demand #JudicialProbeForPollachiRapes

#JusticeFor200Nirbhayas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *