அன்பு அனிதாவிற்கு,

கடந்த வருடம் நடந்த NEET அநீதியால் உயிர் இழந்த உன்னை, மறக்க முடியாமல் நினைவிலேயே வைத்து உள்ளோம்.

நிச்சயமாக தொரடர்ந்து போராடுவோம். இன்னொரு அனிதா இங்கு உருவாகாமல் பார்த்து கொள்வோம். இதற்காகத் தொடர்ந்து போராடுவோம். NEET எதிராகத் தடையை பெறுவோம்.

தமிழகத்தில் NEET இல்லாமல் மறுபடியும் பழைய முறையில் பள்ளி மதிப்பெண்கள் மூலம் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கை அமையும்படி நாங்கள் போராடி வெல்வோம்.

அதுவரை பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும், அது சரி இல்லை இது சரி இல்லை என்று ஒரு சிறிய கூட்டம் எதனை வேண்டுமானாலும் பிதற்றி கொண்டு இருக்கலாம்.

ஆனால் திட்டம் போட்டு தமிழகத்தில் மருத்துவ கல்வி சாமானியனுக்குக் கிடைக்க கூடாது என்ற நோக்கில் மத்தியில் ஆளும் நடுவண் அரசாங்கம் சதி செய்து கொண்டு இருக்கின்றது.

இந்தத் திட்டம் 2010 – 2011 முன்மொழியப் பட்டு இருந்தாலும் அதற்குப் பின் உச்ச நீதிமன்றத்திலே மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அதிலும் குறிப்பாக இருவர் இது ஒரு கேடுகெட்ட கல்விக்கு எதிரான சமூகநீதிக்கு எதிரான, மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரான, மொழிக்கு எதிரான, திட்டம் என்று தடை செய்தனர்.

அதில் ஒரு நீதி அரசர் மற்ற இருவருடன் ஒப்புக் கொள்ளாமல் (DISSENTING JUDGEMENT ) என்ற எதிர்ப்போடு NEET நல்லது எனக் தீர்ப்பு கூறினார்.

2013ல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் அன்று மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று NEET திட்டத்தை கைவிட்டது.

மேலும் அப்பொழுது 2010 -11 கொண்டு வரப்பட்ட NEET முன்மொழிதலும் கூட எந்த எந்த மாநிலங்கள் இதை எதிர்கின்றனரோ அந்த அந்த மாநிலங்களுக்கு விளக்கு அளிக்கப்படும், என்ற குறிப்பும் அதில் அடங்கி இருந்தது குறிப்பிட தக்கது.

எதிர்த்து தீர்ப்பு வழங்கிய அந்த ஒரு நீதி அரசர் கொடுத்த, DISSENTING JUDGEMENT அடித்தளமாகக் கொண்டு மீண்டும் மேல்முறையீடு செய்து பாரதிய ஜனதா அரசு இப்பொழுது NEET அமல்படுத்தி மருத்துவ கல்வியை தனியார்மயம் ஆக்கவும் சாமானியனுக்கு கல்வி இல்லாமல் செய்ய கூடிய சதியையும் செய்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து எதிர்ப்போம் .

NEET இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் !!

– கார்த்திகேய சிவசேனாபதி
02/09/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *