இந்த முகநூலைப் பற்றியோ, Twitter குறித்தோ, பொதுவாக சமூக வலைத்தளங்கள் இடம் பெற்று இருக்கும் வலதுசாரி , so called தமிழ்த் தேசியம் இவர்களின் கூச்சல் குறித்து திராவிட கொள்கையில் பயணிக்கும் சகோதர சகோதரியோர் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

காரணம் என்னவென்றால், சமூக வலைத்தளங்கள், (Facebook, Twitter) எல்லாம் Echo chamber போல. மீண்டும் மீண்டும் அதே ஒலி, பல இடங்களில் கேட்பது போன்றே ஒலிக்கும்.

எத்தனை சத்தம் இவர்கள் ஏற்படுத்தினாலும், ஒரு கூட்டம் 2 சதவீதமும், இன்னொரு கூட்டம் 3% கடந்து வாக்கு வங்கி பெறப் போவது இல்லை.

அதுவும் இந்த தேர்தலில் இன்னமும் குறையப் போகின்றது. ஆதலால் இதனைப் பெரிதாக எண்ணாமல் களத்தில் வேலை செய்வது உண்மையாகவே தமிழ்நாடு சீரழிந்து விட்டது , இந்த தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என எண்ணுபவர்கள் பலர் உண்டு.

அவர்களுக்குத் தக்க ஆவணங்களுடன் தமிழகம் எப்படிப்பட்ட முன்னேற்றத்தை 1960 பின் கண்டு இருக்கின்றது என்பதை எடுத்து உரைத்து நாம் புரிய வைத்தோமானால் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அது போக , Fascist – மத வெறி இன வெறி பிடித்து அரசியல் செய்பவர்களைப் பெரிதாக நாம் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது..

– கார்த்திகேய சிவசேனாபதி
19-10-2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *