உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சென்னி மலை ஒன்றியம், காங்கயம் வட்டம் சார்ந்த அன்பு உடன்பிறப்புகளை இன்று சந்தித்ததில் பெரும் உவகை கொள்கின்றேன்.

திராவிட வரலாற்றையும் பெரியார், அண்ணா, கலைஞர் கடந்து வந்த பாதையும், ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வு, போன்றவற்றால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் குறித்தும் விளக்கினேன்.

குறிப்பாக சென்னிமலை நெசவாளர்களின் தொழில் சிதைந்து மிகவும் கடினமான சூழ்நிலையில் சென்னிமலை நெசவாளர்கள் இருக்கிறார்கள் என்பது வேதனையும் வருத்தமும் அளிக்கிறது. அதனை உடனடியாக மாநில அரசாங்கம் சரி செய்ய வேண்டும்.

இல்லையானால் 2021 ஆம் ஆண்டு தளபதி தலைமையில் ஆட்சி அமையும் போது அதனைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு நெசவாளர்களின் வாழ்வாதாரங்களைக் காக்க வழி வகை செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் புத்தக வாசிப்பைப் பெருக்கிக் கொள்ள, கொங்கு வரலாற்றின் திருப்புமுனை மற்றும் சில பெரியார் புத்தகங்களையும் தம்பிகளுக்கு வழங்கினேன்.

கொள்கைகளையும் சித்தாந்தங்களை நன்கு ஆராய்ந்து, அறிந்து சாமானிய மக்களுக்காகக் கழகமும், தலைவரும் அயராது உழைப்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் உடன்பிறப்புகள் முனைப்புடன் இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது !!

– கார்த்திகேய சிவசேனாபதி
08-10-2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *