விவசாயிகள் இன்றி, விவசாயம் செய்யாமல்
“AM SON OF A FARMER,
AM DAUGHTER OF A FARMER”
நான் விவசாயியின் பேரன்,
நான் விவசாயியின் பேத்தி
விவசாயி தான் இந்நாட்டின் முதுகெலும்பு,
விவசாயி சேற்றில் கால் வைக்காவிட்டால்
நாம் சோற்றில் கை வைக்க முடியாது எனப் பெருமை பேசிக் கொண்டு ஒரு கூட்டம் விவசாயம் செய்யாமல், நல்ல அரசுப் பணியிலோ, தொழில் அதிபர்களாகவோ, தனியார் நிறுவனங்களில் பெரும் பணியிலிருந்து கொண்டு விவசாயம் செய்யும் நம்மைப் போன்ற மூடர்களைத் தொடர்ந்து பெருமை பேசி பேசி தெரிந்தோ தெரியாமலோ ரணகளம் செய்து வருகின்றனர்.
ஆதலால் விவசாயத்தின் மீது ஆர்வம் உள்ளோர் தயவு செய்து விவசாயம் லாபகரமாக நடக்கின்றது எனக் கருத்தில் கொள்ளுங்கள். குறிப்பாகக் குழந்தைகளுக்குச் சிறு குறு விவசாய நிலம் கொண்டவர்கள் குழந்தைகளிடம், தவறான சிந்தனைகளைப் புகுத்தாதீர்கள்.
குழந்தைகள், படித்து முன்னேறி, மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயர் அதிகாரி, வழக்கறிஞர் , நீதிபதி, தொழில் முனைவோர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் என வாழ்வில் பல உயர்வான பதவிகளை வகிக்கட்டும்.
அதை விடுத்தது “நிலம் உள்ளது விவசாயம் செய்யட்டும்” என மீண்டும் மீண்டும் விவசாயம் அரியதோர், புரியாதோர் நமக்குள் எண்ணத்தை விதைக்கிறார்கள் என உணர்வோம்.
விவசாயம் செய்வது தவறில்லை, அதை லாபகரமாக, பொருளாதார ரீதியான நிலைகளைக் கருத்தில் கொள்ளுதல் அவசியம்.
ஆதலால் விவசாயத்தை எப்படி லாபகரமாகச் செய்வது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். மறுமுனையில் கல்வி தொழில் விவசாயம் சார்ந்த சுற்றலா தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டு பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக முன்னேற்ற அடையும் வழிகள் அறிதல் அவசியம்.
வெறும் பெருமை பேசி எந்த பயனும் இல்லை
இனிய விவசாயிகள் தின வாழ்த்துக்கள் !!
– கார்த்திகேய சிவசேனாபதி
23 -12 -2019