திரு. ப. சிதம்பரத்தின் மனைவி, திருமதி. நளினி சிதம்பரம் 12 ஆம் வகுப்பு CBSE வழிக் கல்வி மாணவர்களுக்காக 2017 உச்ச நீதிமன்றத்தில் NEET ஆதரவான வழக்கிலே வாதாடினார்கள் !!

ஆமாம் வாதாடினார்கள். அதற்கு என்ன ?

திரு. ப . சிதம்பரத்தின் வீட்டில் அவரது வாகன ஓட்டுநருக்குக் கூட தான் ஒரு கருத்து இருக்கும்
அதெல்லாம் அனைத்து இந்தியக் காங்கிரஸ் கட்சியின் கருத்தாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியின் எதிர் வினையாகப் பார்க்க மாட்டார்கள், பார்க்கவும் முடியாது.

தேர்தல் வாக்குறுதி என்பது ஒரு கட்சியின் தலைமையும், ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையும் கொடுக்கக் கூடியதே. அது தான் நம்பகத் தன்மை உடையதும் ஆகும்.

எனவே அதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அக்கட்சியின் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் கருத்தும் தேவை அற்றது.

அப்படியே இருந்தாலும் அது திருமதி. நளினி சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்து அல்ல. அவர் ஒரு தொழில் முறை வழக்குரைஞர் ஆவார். அவர் யார் சார்பாக வாதாடினார் என்பதும் முக்கியமற்றது.

ஆதலால் இதை வைத்து அரசியல் செய்வதை விட்டு விட்டு தைரியம் இருந்தால் பாரதிய ஜனதா கட்சியும் தமிழகத்திற்கு – NEET விளக்கு அளிக்கப்படும் என உறுதிமொழி தாருங்கள் பார்ப்போம்.

அதை விடுத்து ப.சிதம்பரத்தின் மனைவியின் கருத்து என்ன ?

வாகன ஓட்டுநரின் கருத்து என்ன ?

தோட்டக்காரரின் கருத்து என்ன ?

என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு இருக்காதீர்கள் .

BJP supporters if you can ask your party leadership to say Neet will be banned for TamilNadu, Salem Chennai highway will not be implemented, kaveri delta region will be announced as green Agri zone ? It’s a challenge to BJP.

– கார்த்திகேய சிவசேனாபதி
16-04-2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *