தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளி, காஷ்மிரி, போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தனது தாய்மொழியை விடப் பிற மொழிகளை உயர்ந்தது என ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டும் இந்தி மொழியை விடச் சமஸ்கிருதம் உயர்ந்தது, அது தான் இந்தி மொழியின் தாய் என்றும், ஆத்தா என்றும் பிதற்றிக் கொள்வார்கள்.

இதற்குக் காரணத்தை ஆராய்ந்தால் இந்தி மொழிக்குச் சரித்திரமோ இலக்கியமோ கிடையாது.

இப்பொழுது அவர்கள் வழக்கில் உள்ள மொழி 100 வருடங்களே ஆன மொழி .
ஆதலால் இவர்களுக்குத் தமிழ் கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளைப் பார்க்கும் பொழுது ஒரு தாழ்மை உணர்வு அவர்களுக்கு ஏற்படுகின்றது.

ஆதலால் இவர்களுக்கும் ஒரு பெருமை வேண்டும் என்ற காரணத்திற்காகச் சமஸ்கிருத மொழியைத் தூக்கிப் பிடித்து அதற்கு 2000 ஆண்டு வரலாறு கொண்டது, அதன் குட்டி தான் இந்தி என்று பிதற்றுகிறார்கள்.

எந்த வித பெருமையும் இல்லாது, பெருமையைத் தேட சிறுமையாக நடந்து கொள்கிறார்கள் இந்த இந்தி வெறியர்கள் !!

– கார்த்திகேய சிவசேனாபதி
31-08-2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *