இன்றைய நாள் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் சென்னிமலை சுப்பிரமணியசாமி கோயில் ஆரம்பித்தது. மலை மீதுள்ள முருகன் கோயில் இந்தியப் புகழ்பெற்றது, இந்த கோவிலில் தான் தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்த சஷ்டி கவசம் என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.நீண்ட இலைகளுடன் கூடிய துரட்டி மரம் என்ற மிகப் பழைய மரம் ஒன்று இங்கு மலைப்படி வழியில் உள்ளதும் குறிப்பிட தக்கது .
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை கைத்தறி போர்வைகளுக்கு பெயர் பெற்றதாகும். அனால் இன்றைய தொடர் பொருளாதார மந்த நிலையம், GST , பணமதிப்பிழப்பும், இன்றைய நெசவாளர்களின் வாழ்வில் பெரும் பாதிப்பையும், வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகவும் மாற்றி உள்ளது மக்களின் மீது சிறிதும் அக்கறையற்ற திரு. எடப்பாடி அவர்களின் பொறுப்பற்ற அரசு. திமுக வின் தலைவரும் , மக்களின் தளபதியுமான முக ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இது குறித்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற உழைப்பேன் என வாக்குறுதியும் நம்பிக்கையும் அளித்துள்ளேன்.
பிறகு சென்னிமலையில் வசிக்கும் செல்வி. நந்தினி, செல்வி .ப்ரீத்தி என்ற இரு மாணவிகள் தமிழக அரசால் வழங்கப்படும் காமராஜர் விருதைப் பெற்று காங்கயம் பகுதிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.அவர்களையம் நேரில் சந்தித்து எனது பாராட்டையும், ஊக்க பரிசையும், உலக பொதுமுறையாம் திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி தமிழ் வழியில் பயின்று IAS அதிகாரியாக உயர்ந்து ஒரிசாவின் முதன்மை செயலாளர் ஆகா பதிவுகள் வகித்த திரு. பாலகிருஷ்ணன் அவர்களை குறித்தும் மாணவிகளுடன் உரையாற்றி உயர் அதிகாரிகளாக வரவேண்டும் என்று வாழ்த்தியும் வந்ததில் பெரும் மகிழ்ச்சி.
பிறகு அங்கிருந்து கொடுமணல் அகழ்வாராய்ச்சியை பார்வையிட பயணப்பட தொடங்கினோம். கொடுமணல் குறித்து நான் படித்த பல விடயங்களும் ஆசிரியங்களும் மனதை ஆக்கிரமிக்க தொடங்கியது.
சென்னிமலை யிலிருந்து மேற்கே சுமார் 15 கிமீ தூரத்திலும்,காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றின் வட கரையில், இன்றைய கொடுமணல் அமைந்துள்ளது.இதன் அமைவிடம், சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பழங்கால தமிழகத்தில், காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, தொண்டி, முசிறி போன்ற வணிக நகரங்கள் உலக அளவில் புகழ்பெற்று விளங்கின. அந்த நகரங்களைப்பற்றி, கிரேக்க நாட்டு அறிஞர்களான பிளினி (Pliny), டாலமி (Ptolemy) ஆகியோர், தங்களது நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
கொடுமணல் உள்ளிட்ட வேறு சில நகரங்களும், பண்டைய தமிழகத்தில் சிறந்து விளங்கியிருக்கின்றன.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த ஊர், சங்க காலத்தில் கொடுமணம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் கி.மு.முதலாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், புகழ்பெற்ற நகரமாக இருந்துள்ளது.
கொடுமணம் நெசவுத் தொழிலிலும், ஆபரணத் தொழிலிலும் சிறந்து விளங்கியிருக்கிறது. ஆபரணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மணிக்கற்கள், அருகில் உள்ள அரசம்பாளையம் மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.
இரும்பு உருக்காலைகளும் இங்கு நிறைய இருந்திருக்கின்றன. சென்னிமலையில் இருந்து இரும்புத்தாது வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. இந்நகரைப் பற்றி, சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகரத்திற்கும் ரோம் நகருக்கும் இடையே வணிகத் தொடர்புகள் இருந்திருக்கின்றன.
கொடுமணலில் உருவாக்கப்பட்ட உருக்கு, எஃகு மற்றும் பலவகை பாசி மணிகள் எகிப்து, உரோமை போன்ற வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. கொடுமணலுக்கும், மேற்குக் கடற்கரையில் முசிறி துறைமுகத்திற்கும் (இன்று கேரளத்தில் “பட்டணம்” என்று அழைக்கப்படும் நகர்) இடையே வணிக வழித் தொடர்பு இருந்தது. ஏற்றுமதிப் பொருள்கள் முசிறிக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
1961ம் ஆண்டு முனைவர் திரு ராஜன் அவர்கள் அதுவரை இருந்த தடைகளை கடந்து ஆதாரங்கள் பெற்று நொய்யல் நாகரிகத்தின் தன்மையையும் கொடுமணத்தில் தொடர் அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டிய அவசியமும் உணர்த்து. அப்போது, பழங்காலத்து நாணயங்கள், மண்பாண்டங்கள், ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டன. சங்ககால தமிழர்கள் இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தார்கள் என்பதற்கு. இந்நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ஆதாரங்களாக உள்ளன.
“‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்'”
கொடுமணல் பற்றிய பதிற்றுப்பத்து பாடல் இது.
கொடுமணம் என்னும் ஊரில் செய்யப்பட்ட பொன்நகைகளும், பந்தர் என்ற ஊரில் எடுக்கப்பட்ட முத்துகளும்” என்பது இதன் பொருள்.
முசிறி, பந்தர், கொடுமணம் ஆகியவை சேரநாட்டிலிருந்த பிற துறைமுகங்கள் ஆகும். இவற்றைப்பற்றிப் பெரிப்ளஸ் குறிப்பிடுகிறார். இந்தத் தொண்டியின் அழகை சங்கப்பாடல்களில் சில மகளிரின் அழகோடு ஒப்பிட்டுப் போற்றுகின்றன. இந்த ஊரின் அரசன் இன்னின்னார் எனவும் பாடல்கள் தெரிவிக்கின்றன
மேலும் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி , மாண்டவர் குழி என்று அழைக்கப்படும் ஈம சின்னங்கள் அவர்களின் வாழ்வியலுக்கான எடுத்துக்காட்டாக இன்றும் விளங்குகின்றது.
27 -05 – 2020 அன்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மீண்டும் கொடுமணலில் புதிதாக அகழாய்வுப் பணிகள் துவங்கியது. இதன் மூலம் மக்கள் வாழ்ந்த நகரங்களும் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியையும் வியப்பையும் என்னுள் ஆழ்த்தியது.
இந்நிகழ்வினை ஒருங்கிணைத்த திரு. ஈஸ்வரன் மற்றும் சென்னிமலை திமுக உடன்பிறப்புகள், திமுக இளைஞர் அணி தம்பிகள், மகளிர் அணி சகோதரிகள், மாணவர் அணி செல்வங்கள், மீனவர் அணி அன்பர்கள், நெசவாளர் அணி நண்பர்கள் மற்றும் தோழமை கட்சிகளான காங்கிரஸ் , விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொங்கு நாடு முன்னேற்ற கழகம், மற்றும் உதயநிதி இளைஞர் அணி சகோதர சகோதரியர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.
– கார்த்திகேய சிவசேனாபதி
15-10-2020