மொழி இந்தி திணிப்பு, சேலம் சென்னை எட்டு வழிச் சாலை , NEET, கதிரா மங்கலம், மாநிலங்களுக்கான உரிமை என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
ஒரு சின்ன கதை ,
ஒரு ஊரில் நூற்றுக் கணக்கான ஏக்கர் பூமி உள்ளது. இந்த பூமிக்கு 34 குடும்பங்கள் சொந்தக்காரர்கள். அவரவர் அவரவர் பூமியில் விவசாயம் செய்து வருகிறார்கள்.
அதிலே உ.பி என்கிற குடும்பம் , சீமை கரு வேளான் வளர்கின்றது.
ம.பி என்கிற குடும்பமும் கருவேல் , நரி குட்டியையும் வளரச் செய்தது.
ஆனால் கருப்பன் என்பவரின் குடும்பம் தோட்டத்திற்குக் கரும்பு நெல், மஞ்சள், தென்னை மரம், சிறிதாய் ஒரு மழை நீர் சேகரிப்பு குட்டை , ஒரு கிணறு, ஒரு ஆள் துழாய் கிணறு, அழகான வீடு , குழந்தைகள் பள்ளிக்குச் செல்லப் பெற்றோர் விவசாயம் பார்க்க இப்படி மிக அழகாக அந்த தோட்டத்தை வைத்து உள்ளார்கள்.
இப்படி இருக்கக் கூடிய சூழலில் 45 மாடுகளை மேய்த்துக் கொண்டு குஜ்ஜி என்பவர் வருகிறார்.
அந்த மாடுகள் இந்த ஊரில் உள்ள விவசாய நிலங்களைப் பாழ் படுத்த முயல்கின்றது.
அப்படி வரும் போது எந்த குடும்பம் முதலில் சென்று மாடுகளை விரட்டுவார்கள் ???
அந்த சீமை கருவேல் வளர்க்கும் உ.பி குடும்பத்தினரா ?? அல்லது சீமை கருவேல் நரி குட்டிகளை வளர்த்து வைத்து இருக்கும் ம.பி குடும்பத்தினரா ??
அல்லது கரும்பு, மஞ்சள், நெல் என வெள்ளாமை செய்யும் பல நூறு ஆண்டுகளாகப் பூமியைப் பராமரிப்பு செய்து கிணறு வெட்டி நீர் நிலைகள் அமைத்து தோட்டத்தைப் பராமரிப்பவர் வருவாரா ???
அதே தான் தமிழகத்தின் நிலையும். இந்திய நாட்டில் இருக்கக் கூடிய மாநிலங்களில் முதன்மையானது மாநிலத்தைச் சமூகநீதி, கல்வி , தொழில்துறை , சுகாதாரம் என முதன்மையானதாக உருவாக்கி உள்ளனர் திராவிட ஆட்சியாளர்கள்.
ஆதலால் தான் மாடு இந்தியாவை மேயப் பார்க்கும் போது நாம் முதலிலேயே விரட்டி அடித்து வெள்ளாமையை மேய்ந்து விடக் கூடாது என எட்டி குதித்து ஓடிச் சென்று மாடுகளை விரட்டுகின்றோம் !!
– கார்த்திகேய சிவசேனாபதி
21-09-2020