13-01-2020 அன்று திருச்செங்கோடு – SPK GEMS பள்ளியின் ஆண்டு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன்.
எனக்கு அளிக்கப்பட்டு இருந்த தலைப்பு “இன்றைய கல்வி முறையும், தமிழர் பண்பாடும் பாரம்பரியமும்” .
இத்தலைப்பினை முன்னெடுத்த பள்ளிக்கும் அதன் தாளாளர் அருமை தம்பி பிரபுவிற்கும் வாழ்த்துகள்.
இந்தியப் பெருநகர பள்ளிகளுக்கு ஈடாக இந்த கிராமப்புற சூழ்நிலையில் தரமான கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளவர்கள்.

ஐக்கிய நாட்டின் UNESCO அங்கீகாரம் பெற்று வருடம் 25 குழந்தைகள் வெளிநாடுகளுக்குச் சென்று – (Student Exchange Programme) வெளிநாடுகளின் கலாச்சாரத்தை கற்றுத் தேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது போலப் பல விதமான மனித வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமான சுற்றுச்சூழல் இயற்கை விவசாயம், மரங்கள், பல்லுயிர் பாதுகாப்பு , போன்ற பல்வேறு பரிணாமங்களில் குழந்தைகளுக்கு அனுபவங்கள் பெற வழிவகுத்து உள்ளனர்.

இயற்கையைப் பேணி காக்கும் வகையில் பலருக்கு இப்பள்ளி முன்மாதிரியாக விளங்குகின்றது.

4000 பெற்றோருக்கிடையே ஆண்டு விழாவில் உரையாடியதிலும், குழந்தைகளின் நிகழ்ச்சிகளைக் கண்டதிலும் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

SPK GEMS பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

http://www.spkschools.com/

– கார்த்திகேய சிவசேனாபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *